புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 29 நவம்பர் 2018 (16:00 IST)

சோனியா காந்தி சென்னை வரும் தேதி அறிவிப்பு

முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் சிலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் வைக்க ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில் இந்த சிலை திறப்பு விழாவிற்கு முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வருவார் என்று கூறப்பட்டது. இருப்பினும் சிலை திறப்பு தேதி முடிவு செய்யமால் இருந்தது

இந்த நிலையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்க சோனியா காந்தி சென்னை வரவுள்ளார் என்ற உறுதி செய்யப்பட்ட செய்தி சற்றுமுன் திமுக தரப்பில் இருந்து வெளிவந்துள்ளது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் டிசம்பர் 16ம் தேதி நடைபெறும் சிலை திறப்பு விழாவில் பங்கேற்க சோனியா காந்தி ஒப்புதல் அளித்துள்ளதாகவும், சோனியா மட்டுமின்றி இன்னும் சில அகில இந்திய தலைவர்களும் இந்த விழாவில் கலந்து கொள்வார்கள் என்றும் திமுக தரப்பினர் தெரிவித்தனர். சோனியாவின் வருகை திமுக-காங்கிரஸ் கூட்டணியை உறுதி செய்யும் என்றும் அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன