40ம் நமக்கே, 20ம் நமக்கே: வைகோ சூளுரை
திமுக கூட்டணியில் இப்போதைக்கு வைகோவின் மதிமுக இல்லை என்று திமுக பொருளாளர் துரைமுருகன் வெளிப்படையாக கூறியபின்னரும் திமுகவுடன் தான் கூட்டணி வைப்பேன் என்று வைகோ உறுதியாக இருப்பது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
இந்த நிலையில் இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்த வைகோ, திமுக கூட்டணியில் மதிமுக எப்போதும் இருக்கும் என்று உறுதி கூறியுள்ளார். ஆனால் கூட்டணி குறித்து இன்னும் ஸ்டாலின் எந்தவித கருத்தையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற பாடுபடுவேன் என்றும் 20 தொகுதி இடைத்தேர்தல் நடந்தாலும் திமுக கூட்டணியின் வெற்றிக்கு பாடுபடுவேன் என்றும், மொத்தத்தில் 40ம் நமக்கே, 20ம் நமக்கே என்று வைகோ சூளுரைத்துள்ளார்.