1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 10 டிசம்பர் 2021 (19:05 IST)

தாயை கொன்ற மகனுக்கு தூக்கு தண்டனையில் இருந்து ஆயுள் தண்டனையாக மாற்றம்!

தாயை கொன்ற மகனுக்கு கீழமை நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கி இருந்த நிலையில் தற்போது சென்னை உயர் நீதிமன்றம் ஆயுள் தண்டனையாக குறைத்து உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது
 
2018ல் மறவன்பட்டி பஸ் ஸ்டாப்பில் தாயை கொன்ற மகனுக்கு, புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றம் தூக்கு தண்டனையும், ரூ.50,000 அபராதமும் விதித்து கடந்த மாதம் தீர்ப்பு வழங்கியிருந்தது
 
இளைஞரின் வயது, சமூக பின்னணி மற்றும் குடும்ப பொறுப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு கீழமை நீதிமன்றம் வழங்கிய தூக்கு தண்டனையை ரத்து செய்து, ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டு ரூ.10,000 அபராதம் விதித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.