1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: ஞாயிறு, 23 ஏப்ரல் 2017 (21:24 IST)

விவசாயிகளுக்கு உண்மையிலேயே உதவணுமா? சினேகா செஞ்சதை செய்யுங்க!

தமிழக விவசாயிகள் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தலைநகர் டில்லியில் பல்வேறு வகையான நூதன போராட்டங்களை செய்து வருகின்றனர். பிரதமர் முதல் மத்திய அரசின் அமைச்சர்கள், அதிகாரிகள் வரை இந்த போராட்டத்தை கண்டு கொள்ளாத நிலையில் 40 நாட்கள் கழித்து இன்றுதான் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் சென்று விவசாயிகளை சந்தித்துள்ளார்.



 


அரசியல்வாதிகள் மட்டுமின்றி பொதுமக்கள் மத்தியிலும், மாணவர்கள், இளைஞர்கள் மத்தியிலும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு கிடைக்கவில்லை. ஜல்லிக்காட்டுக்காக கொந்தளித்த மாணவர்கள் விவசாயிகள் போராட்டத்தை வேடிக்கை பார்த்தார்கள் என்பது தான் உண்மை

இந்த நிலையில் நடிகை சினேகா நலிந்த விவசாயிகள் பத்து பேர்களுக்கு ரூ.2 லட்சம் உதவி செய்துள்ளார். கோடிகளில் சம்பளம் வாங்கும் மாஸ் நடிகர்கள் கூட ஒரு பைசா விவசாயிகளுக்காக கொடுக்க முன்வராத நிலையில், மார்க்கெட் இழந்த நடிகை சினேகா செய்த உதவி மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு வசதி படைத்தவர்களும் விவசாயிகளுக்கு சினேகா போன்று உதவி செய்தாலே விவசாயிகளின் பிரச்சனை பாதி தீர்ந்துவிடும். செய்வீர்களா?