1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: ஞாயிறு, 22 அக்டோபர் 2017 (18:47 IST)

பழைய பேப்பர் கடையில் ஸ்மார்ட்கார்ட் விண்ணப்பங்கள்: அதிர்ச்சி தகவல்

ரேசன் கார்டுகளுக்கு பதில் ஸ்மார்ட்கார்டுகளை தமிழக அரசு வழங்கி கொண்டிருக்கின்றது. அதிலும் புகைப்படங்கள் மாறி மாறி வருவதாக ஏற்கனவே பல குற்றச்சாட்டுக்கள் எழுந்து வருகிறது.



 
 
இந்த நிலையில் ரேசன் கார்டு இல்லாதவர்கள் நேரடியாக ஸ்மார்ட்கார்ட் கேட்டு விண்ணப்பம் செய்துள்ளனர். ஆயிரக்கணக்கில் இந்த விண்ணப்பங்கள் விண்ணப்பிக்கப்பட்டுள்ள நிலையில் திருவண்ணாமலை அருகேயுள்ள கண்ணமங்கலம் பெரிய மசூதி பகுதியில் உள்ள பழைய பேப்பர் கடையில் ஸ்மார்ட்கார்ட் விண்ணப்பங்கள் சிதறிக் கிடப்பதை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து ஆட்சியரிடம் முறையிட உள்ளதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.
 
இதேபோல் இன்னும் எத்தனை பகுதிகளில் ஸ்மார்ட்கார்ட் விண்ணப்பங்கள் பழைய பேப்பர் கடைக்கு சென்றதோ என்ற சந்தேகம் பலருக்கு ஏற்படுகிறது. இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.