Last Updated : வியாழன், 8 டிசம்பர் 2016 (13:45 IST)
எப்பப்பா ஜெயலலிதா சரியாகி வருவாங்க: கதறி அழும் சிறுமி! (வீடியோ இணைப்பு)
எப்பப்பா ஜெயலலிதா சரியாகி வருவாங்க: கதறி அழும் சிறுமி!
மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு இறுதியாக பொதுமக்கள் அஞ்சலி செலுத்தியதை தொலக்காட்சியில் பார்த்து ஒரு சிறுமி கதறி அழும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22-ஆம் தேதி உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 75 நாட்கள் மருத்துவ போராட்டத்துக்கு பின்னர் கடந்த 5-ஆம் தேதி மரணமடைந்தார்.
இவரது இறுதிச்சடங்கு 6-ஆம் தேதி நடந்தது. அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து ஜெயலலிதாவின் உடல் அவரது போயஸ் கார்டன் இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டு மத சம்பிரதாயங்களை முடித்த பின்னர், அதிகாலையில் ராஜாஜி மாஹாலில் பொது மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது.
ஜெயலலிதாவின் மரணத்தால் தமிழகமே சோகத்தில் ஆழ்ந்தது. கட்சி வேறுபாடின்றி பலரும் கண்ணீர் வடித்தனர். இந்த மிகப்பெரிய இழப்பை தாங்க முடியாத 77 பேர் தங்கள் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருந்த ஜெயலலிதாவின் இறுதி ஊர்வலத்தை பார்க்கும் சிறுமி ஒருவர் அவர் இறந்ததை கூட அறியாமல் தனது அப்பாவிடம் எப்பப்பா ஜெயலலிதா சரியாகி வருவாங்க கதறி ஆழும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.