1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 8 டிசம்பர் 2023 (08:32 IST)

செங்கல்பட்டு மாவட்டத்தில் திடீர் நில அதிர்வு: பொதுமக்கள் அதிர்ச்சி..!

earthquake
செங்கல்பட்டு மாவட்டத்தில் சமீபத்தில் தான் கனமழை மற்றும் பெருவெள்ளம் ஏற்பட்ட நிலையில் தற்போது தான் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். இந்த நிலையில் திடீரென  நில அதிர்வு ஏற்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

 செங்கல்பட்டை மையமாக கொண்டு லேசான நில அதிர்வு ஏற்பட்டதாகவும் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நில அதிர்வு ரிக்டர் அளவில் 3.2 என பதிவாகி உள்ளதாகவும்  அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் பெரும் அச்சத்துடன் உள்ளனர்.

ஏற்கனவே செங்கல்பட்டு மாவட்டத்தில் சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இயல்பு வாழ்க்கையை கொஞ்சம் கொஞ்சமாக திரும்பிக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது திடீரென நில அதிர்வு ஏற்பட்டதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இருப்பினும் இந்த நில அதிர்வால் எந்த விதமான சேதமும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.

Edited by Siva