1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 14 செப்டம்பர் 2020 (15:39 IST)

நீதிமன்றம் குறித்து சூர்யாவின் கருத்து: 6 நீதிபதிகள் கூட்டாக தலைமை நீதிபதிக்கு கடிதம்

நீதிமன்றம் மற்றும் நீதிபதிகள் குறித்து சூர்யா நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்து சர்ச்சைக்குரிய கருத்துக்கு உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்எம் சுப்ரமணியம் கடுமையான கண்டனம் தெரிவித்ததையடுத்து தலைமை நீதிபதிக்கு கடிதம் ஒன்றை எழுதினார் 
 
நீதிமன்றம் மற்றும் நீதிபதிகளை அவமதித்த சூர்யா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இல்லையேல் எதிர்காலத்தில் நீதிபதிகள் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லாமல் போகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
இந்த கடிதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது ஓய்வு பெற்ற நீதிபதிகள் 6 பேர் ஒன்றாக இணைந்து கூட்டாக ஒரு கடிதத்தை தலைமை நீதிபதிக்கு அனுப்பி உள்ளனர். அந்த கடிதத்தில் நீதிபதி சுப்பிரமணியம் அவர்கள் கடிதம் எழுதியது போல் சூர்யா மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் நடிகர் சூர்யா மீது எந்த நடவடிக்கையும் வேண்டாம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்
 
மேலும் பள்ளி மாணவர்கள் மரணம் குறித்து சூர்யா தெரிவித்த கருத்துக்களை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர்கள் தங்களது கடிதத்தில் கூறியுள்ளனர். சூர்யாவுக்கு எதிராக ஒரு நீதிபதியும் ஆதரவாக 6 நீதிபதியும் அடுத்தடுத்து தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது