திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 17 ஜூன் 2021 (12:14 IST)

சிவசங்கர் பாபா கைதாவார்: 22 ஆண்டுகளுக்கு முன்பே சொன்ன யாகவா முனிவர்!

சிவசங்கர் பாபா கைதாவார்: 22 ஆண்டுகளுக்கு முன்பே சொன்ன யாகவா முனிவர்!
சென்னை கேளம்பாக்கத்தில் சுஷில் ஹரி என்ற சர்வதேச பள்ளியை நடத்தி வரும் சிவசங்கர் பாபா மீது மாணவிகள் கொடுத்த புகாரை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அவர் மீது போக்சோ சட்டத்தில் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் 22 ஆண்டுகளுக்கு முன்பேசிவசங்கர் பாபா கைதாவார் என்று  யாகவா முனிவர் கூறியுள்ள தகவல் தற்போது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. 22 ஆண்டுகளுக்கு முன் நடந்த காரசாரமான விவாதம் ஒன்று சன் டிவியில் ஒளிபரப்பானது. இதில் இருவரும் காரசாரமாக மோதிக்கொண்டபோது, ‘நீ கண்டிப்பாக ஒருநாள் போலீசாரால் கைது செய்யப்படுவாய்’ என்று யாகவா முனிவர் கூறினார். 22 ஆண்டுகளுக்கு முன்பு யாகவா முனிவர் கூறியது இன்று நிஜமாகவே நடந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் யாகவா முனிவர், சிவசங்கர் பாபா கலந்து கொண்ட நிகழ்ச்சி இன்று மீண்டும் சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது என்பதும் 22 ஆண்டுகளுக்குப் பின்னர் ஒளிபரப்பாகும் அந்த நிகழ்ச்சியை காண பலர் ஆவலுடன் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.