வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 14 அக்டோபர் 2018 (20:23 IST)

சிவாஜி குடும்பத்தில் இருந்தும் ஒரு அரசியல் கட்சியா? ராம்குமார் சூசக தகவல்

இதுவரை நாம் மற்றவர்களுக்கு வாழ்க' போட்டே பழகிவிட்டோம். விரைவில் நமக்கு நாமே 'வாழ்க' என்று கூறும் நாள் வரும் என சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம்குமார் பேசியுள்ளார்.

சிவாஜி கணேசனின் 90வது பிறந்த நாள் விழா மதுரையில் சமீபத்தில் நடந்தது. இந்த விழாவில் சிவாஜியின் மூத்த மகன் ராம்குமார் கலந்து கொண்டு மூத்த சிவாஜி ரசிகர்களை கெளரவப்படுத்தினார்.

பின்னர் ராம்குமார் பேசியபோது, 'மதுரையில் சிவாஜிக்கு வெறித்தனமான ரசிகர்கள் அதிகம் என்று கூறினார். அப்போது சிவாஜியின் ரசிகர்கள் 'சிவாஜி வாழ்க' என்று கோஷமிட்டனர். அப்போது ராம்குமார், 'இதுவரை நம்ம கூட்டம் மற்றவர்களுக்கு வாழ்க' போட்டே பழகிய கூட்டமாக இருந்தது. ஆனால் இனிமேல் நமக்கு நாமே 'வாழ்க' என்று கோஷமிடும் நல்ல நாள் விரைவில் வரும்' என்று கூறினார்

இதில் இருந்து ராம்குமார் சொந்த கட்சியோ அல்லது ஏதாவது ஒரு கட்சியிலோ இணையும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.