ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 27 ஜூலை 2019 (09:20 IST)

ஹெல்மெட் அணியாமல் சென்ற போலிஸ் – சஸ்பெண்ட் ஆன சோகம் !

ஹெல்மெட் அணியாமல் சென்ற காவல் உதவி ஆய்வாளர் மதன்குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

இருசக்கரம் வாகனம் ஓட்டுவோர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று உயர்நீதிமன்றம் அவ்வப்போது மாநில அரசுக்கு அறிவுறுத்திக்கொண்டே உள்ளது. இந்நிலையில் தற்போது சென்னையில் கண்காணிப்புக் கேமராக்களை போலீஸார் பொருத்தியுள்ளனர். இதில் போக்குவரத்து விதி மீறலில் ஈடுபடும் மக்களின் வீட்டுக்கே சம்மன் அனுப்பும் திட்டத்தையும் துவங்கியுள்ளனர். இந்நிலையில் காவல்துறை அதிகாரிகளும் கட்டாயமாக ஹெல்மெட் அணியாவிட்டாலும் தண்டனை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

சென்னை போக்குவரத்து காவல் துறையால் gctp எனப்படும் காவலர் செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்மூலம் போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பான புகாரை அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த செயலின் மூலம் பெறப்பட்ட புகாரை அடுத்து  மேற்கு மாம்பலம் காவல் நிலைய சட்ட ஒழுங்கு உதவி ஆய்வாளர் மதன்குமார் இணை ஆணையர் மகேஸ்வரி சஸ்பெண்ட் செய்துள்ளார்.

இதுபோல ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஒட்டி சென்ற 100க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள் மேல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.