செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 29 டிசம்பர் 2023 (21:00 IST)

விஜயகாந்த்திற்கு சிவசேனா கட்சியினர் மெளன அஞ்சலி

shiva sena
முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும், திரைப்பட நடிகருமான விஜயகாந்த்ற்கு கரூரில் மெளன அஞ்சலி செலுத்திய சிவசேனா கட்சியினர்.
 
தமிழ் திரை உலகில் தனி முத்திரை பதித்த நடிகர் விஜயகாந்த், தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் என்கின்ற கட்சியினை உருவாக்கி அதனை  திறம்பட நடத்தி தமிழக அரசியலிலும் தனி முத்திரை பதித்தவர் ஆவார்.

தமிழக எதிர்க்கட்சித் தலைவராகவும் வளம் வந்த இவர் நேற்று வியாழக்கிழமை காலை உயிரிழந்தார். இவரது இறப்பிற்கு மத்திய அரசும் மற்றும் மாநில அரசும் மட்டுமல்லாமல் உலக அளவில் உள்ள தமிழர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் கரூர் பேருந்து நிலையம் ரவுண்டானா அருகே சிவசேனா சார்பில் மாநில பிரச்சார பிரிவு செயலாளர் சரவணன் தலைமையில் மறைந்த முன்னாள் எதிர்க்கட்சி தலைவரும் பிரபல நடிகருமான விஜயகாந்த் அவர்களது திரு உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாநில வர்த்தக அணி செயலாளர் சக்தி முருகேசன், கரூர் மாவட்ட தலைவர் ஆனந்த், மாவட்ட இளைஞரணி தலைவர் முரளி, மாவட்ட இளைஞரணி செயலாளர் கரண், மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் அர்ஜுன் மற்றும் நகர செயலாளர் விக்கி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மறைந்த முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும், தேமுதிக கட்சியின் தலைவருமான நடிகர் விஜயகாந்த் மறைவிற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.