1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 8 ஜூலை 2023 (19:46 IST)

கமல்ஹாசனின் அரசியல் கட்சியில் சேர மாட்டேன்.. கார் வாங்கிய ஓட்டுனர் ஷர்மிளா பேட்டி..!

sharmila -kamalhasan
கோவையில் பேருந்து ஓட்டுனராக இருந்த ஷர்மிளாவுக்கு சமீபத்தில் கமல்ஹாசன் கார் பரிசளித்த நிலையில் கமல்ஹாசனின் அரசியல் கட்சியில் சேர மாட்டேன் என அவர் பேட்டி அளித்துள்ளார். 
 
சமீபத்தில் கோவையில் பேருந்து ஓட்டுனர் ஷர்மிளாவின் பேருந்தில் கனிமொழி எம்பி பயணம் செய்ததால் ஏற்பட்ட பிரச்சனையால் அவரது வேலை பறிபோனது. 
 
இதனை அடுத்து அவரை சென்னைக்கு வரவழைத்து அவருக்கு கார் வாங்கி கொடுத்த கமலஹாசன் அதை வைத்து சொந்த தொழில் செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தி இருந்தார். 
 
இந்த நிலையில் ஷர்மிளா பேட்டி அளித்த போது கமல்ஹாசனின் அரசியல் கட்சியில் சேர மாட்டேன் என்றும் அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை என்றும் தெரிவித்தார். ஆனால் அதே நேரத்தில் கமல்ஹாசனின் மகளாக இருப்பேன் என்றும் அவர் எனக்கு தந்தை போன்றவர் என்றும் கூறினார்.
 
Edited by Mahendran