1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva

ரூ.1.14 இலட்சம் கோடியை இழந்தது அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம்: என்ன காரணம்?

Reliance
இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ரிலையன்ஸ் நிறுவனம் கடந்த ஒரே வாரத்தில் 1.15 லட்சம் கோடி மதிப்பை இழந்து விட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
கடந்த வாரத்தில் பங்குச்சந்தை கடுமையாக வீழ்ச்சி அடைந்தது என்பதும் இதன் காரணமாக 10 நிறுவனங்களின் மதிப்பு 2 லட்சத்து 85 ஆயிரம் கோடி ரூபாய் குறைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
கடந்த வாரத்தில் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 2225 புள்ளிகளும், தேசிய பங்கு சந்தை 691 புள்ளிகளும் வீழ்ச்சி அடைந்தன. குறிப்பாக அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சந்தை மூலதன மதிப்பு ஒரு லட்சத்து 15 ஆயிரம் கோடி குறைந்துள்ளதாகவும், டாடா கன்சல்டன்சியின் மதிப்பு 42 ஆயிரத்து 847 கோடி குறைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன