1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: சனி, 9 ஜூலை 2016 (11:10 IST)

பெண்ணுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்த நபர் கைது

சேலம் அருகே, அழகிய பெண்ணுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
சேலம் மாவட்டம், கொளத்தூரில் உள்ள ஒரு பிரபல ஜூவல்லரி கடையில் பணியாற்றி வருகின்றார் ஊஞ்சக்கொரை கிராமத்தை சேர்ந்த கோமதி (24).
 
இந்த நிலையில், கடைக்கு விடுமுறை அளிக்கப்பட்டதால், கோமதி, அருகிலுள்ள வனப்பகுதிக்கு சென்று விறகு பொறுக்கிக் கொண்டு இருந்துள்ளார்.
 
இதைக் கண்ட அந்த பகுதியைச் சேர்ந்த பகலவன் (19), கோமதியை பாலியல் உறவுக்கு அழைத்து வற்புறுத்தியுள்ளார். அதற்கு அவர் மறுக்கவே, அவரை கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளார்.
 
இதனையடுத்து, அங்கிருந்து தப்பிய கோமதி, இது குறித்து மேட்டூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவுசெய்த போலீசார் காமவெறியன் பகலவனை கைது செய்தனர்.