வியாழன், 12 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 5 டிசம்பர் 2024 (11:35 IST)

குடிநீரில் கழிவுநீர்..? இருவர் பலி! காரணம் குடிநீர் அல்ல! - அமைச்சர் மறுப்பு!

Tha mo anbarasan

தாம்பரத்தில் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்து இருவர் பலியானதாக வெளியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

தாம்பரம் 13வது வார்டில் மக்கள் வழக்கமாக குடிக்கும் குடிநீரில் கழிவுநீர் கலந்ததாக கூறப்படுகிறது. இது தெரியாமல் மக்கள் அதை குடித்ததில் பலருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் இருவர் தற்போது வரை சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளனர்.

 

இந்நிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் சொன்ன அமைச்சர் த.மோ.அன்பரசன், 13வது வார்டையும் சென்று பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்கள் பாதிக்கப்பட குடிநீர் காரணம் அல்ல என கூறியுள்ளார்.
 

 

அவர் கூறியதாவது “சென்னை, பல்லாவரம் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீரில் கழிவுநீர் கலக்கவில்லை. குடிநீரில் கழிவுநீர் கலந்திருந்தால் நூற்றுக்கணக்கில் பாதிக்கப்பட்டிருப்பார்கள். ஆனால் 23 பேருக்குதான் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. உடல்நலம் பாதிக்கப்படுவதற்கு முன் அவர்கள் மீன் சாப்பிட்டுள்ளார்கள். உணவுப்பொருள் கலப்படம் நிகழ்ந்ததாலேயே ஒருவர் பலியாகியுள்ளார்.

 

இந்த பகுதிகளில் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். உடல்நல கோளாறுக்கான சரியான காரணம் சில மணி நேரங்களில் தெரிந்துவிடும்” எனக் கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K