திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : திங்கள், 26 ஜூன் 2017 (16:47 IST)

ரம்ஜான் கொண்டாடிய செந்தில் பாலாஜி – இளம் விஞ்ஞானி ரிபாஃத்துக்கு ரூ.1 லட்சம் பரிசு

கரூர் மாவட்ட முன்னாள் செயலாளரும், போக்குவரத்து துறை அமைச்சருமான வி.செந்தில் பாலாஜி, தற்போதைய புதிய அமைச்சர் மற்றும் புதிய மாவட்ட செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கரினால் ஆங்காங்கே ஒரங்கட்டி வரும் நிலையில் தற்போது அவர் தொகுதிக்கு எதாவது நிகழ்ச்சி என்றால் கூட சட்டசபை கூடும் நேரத்தை தவிர்த்து மற்ற நேரத்தில் கோயில் கும்பாபிஷேகங்கள் மற்றும் மண்டலாபிஷேகங்களில் கலந்து கொண்டு வந்ததோடு, கட்சி நிர்வாகிகள் மற்றும் அ.தி.மு.க மூத்த நிர்வாகிகளோடு பல்வேறு பணிகளை செய்து வருகிறார். 


 

 
தமிழக அளவில் இஸ்லாமியர்கள் அதிக அளவில் வசிக்கும் அரவக்குறிச்சி தொகுதி, பள்ளப்பட்டியில் இப்தார் நோன்பில் பங்கேற்றதுடன் ரம்ஜான் நிகழ்ச்சியிலும் பங்கேற்று இஸ்லாமியர்களுடன் ரம்ஜானை கொண்டாடினார். மேலும் இதே அரவக்குறிச்சி தொகுதியில் வசிக்கும் இளம் விஞ்ஞானியும், சிறிய செயற்கைகோளை வடிவமைத்த இளம் விஞ்ஞானிக்கு ரிபாஃத் ஷாரூக்கிற்கு அரவக்குறிச்சி எம்எல்ஏ செந்தில் பாலாஜி ரூ. 1 லட்சம் பரிசு வழங்கி ரம்ஜான் தினத்தின்று சிறப்பு ஷாக் கொடுத்தார். 
 
மேலும் ஏற்கனவே தமிழக அரசு அறிவித்த ரூ.10 லட்சம் தொகுதிக்கான பரிசு இவரது பரிந்துரையின் கீழ் என்று புகழ்பெற்ற செந்தில் பாலாஜி, தற்போது இவரது சொந்த நிதியிலிருந்து ரூ 1 லட்சத்தை கொடுத்து கெளரவித்தார். 
 
கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியைச் சேர்ந்த மாணவர் முகமது ரிஃபாத் ஷாரூக். கிரசென்ட் மெட்ரிக் பள்ளியில் பிளஸ் 2 முடித்துள்ளார். நாசா நடத்திய போட்டியில் கலந்து கொண்ட இவர் சிறிய வடிவிலான செயற்கைக்கோளை வடிமைத்துள்ளார். 3டி ப்ரிண்டிங் மூலம் புதிய தொழில்நுட்பத்தில் இதனை உருவாக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவரது சாதனைகளை பாராட்டி ரூ.1 லட்சம் பரிசை செந்தில் பாலாஜி வழங்கியதோடு, வேறு ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால் செய்ய தயாராக உள்ளதாக செந்தில் பாலாஜி உறுதியளித்தார். 
 
முன்னதாக இஸ்லாமியர்களின் மெளன ஊர்வலத்திலும் பங்கேற்ற அவர் எனது வழி எப்போதும், சின்னம்மாவின் உத்திரவிற்கினங்க, அண்ணன் டி.டி.வி தினகரனின் வழி என்றும் தெள்ளத்தெளிவாகவும் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார்.

சி.ஆனந்தகுமார் - கரூர் செய்தியாளர்..