1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 8 ஏப்ரல் 2022 (20:40 IST)

சித்திரைத் திருவிழாவில் அணில்கள் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள்: செல்லூர் ராஜு

Sellur
மதுரை சித்திரை திருவிழாவின் போது அணில்கள் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ சட்டப்பேரவையில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
மதுரை சித்திரை திருவிழா நடைபெற்று வரும் நிலையில் மின்வெட்டு வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று கூறுவதற்கு பதிலாக அணில்கள் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று அவர் பேசியது சட்டமன்ற உறுப்பினர்கள் மத்தியில் சிரிப்பலைகளை ஏற்படுத்தியது
 
அப்போது அமைச்சர் செந்தில்பாலாஜி பதில் சொல்ல முயன்ற போது முதலமைச்சர் மு க ஸ்டாலின் வேண்டாம் என தடுத்து விட்டதால் அவர் அமர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது