புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: வியாழன், 19 டிசம்பர் 2019 (09:16 IST)

“நமக்கு நோ வெக்கம், நோ கூச்சம்”.. காலில் விழுந்து ஓட்டு கேளுங்க.. அமைச்சர் அறிவுரை

வாக்காளர்களின் காலில் விழ வெட்கப்படாதீர்கள் என அதிமுகவினருக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ அறிவுரை கூறியுள்ளார்.

தமிழகத்தில் வருகிற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களக ஊராட்சி தொகுதிகளுக்கு உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. இதனிடையே வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான தேதி நிறைவடைந்துள்ளதில் திமுக, அதிமுக, நாம் தமிழர் ஆகிய கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் மதுரையில் உள்ளாட்சி தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்கள் அறிமுகம் மற்றும் தேர்தல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ வீடு வீடாக சென்று கூச்சப்படாமல் வாக்காளர்களின் காலில் விழுந்து ஓட்டு சேகரிக்க வேண்டும் என அதிமுகவினருக்கு அறிவுரை வழங்கினார்.