1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Updated : சனி, 10 டிசம்பர் 2016 (17:00 IST)

சேகர் ரெட்டி பணத்தை இதற்கு செலவிடலாம்: விஷால் விருப்பம்

சேகர் ரெட்டியிடம் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை மாற்றுத் திறனாளிகளுக்கு கழிப்பறை கட்டுவதற்கும், புற்று நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கும் செலவிடலாம் என்று விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


 

 
சென்னையை சேர்ந்த தொழிலதிபர் சேகர் ரெட்டி வீட்டில் வருமான வரித்துறையினர் செய்து வரும் சோதனையில் கணக்கில் காட்டப்படாத பல கோடி பணம் மற்றும் தங்க நகைகள் சிக்கியுள்ளது.
 
ரூ.138 கோடி பணமும், 157 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதில் ரூ.70 கோடி புதிய 2000 ரூபாய் நோட்டுகள். 
 
தற்போது இது சிபிஐ விசாரணைக்கு மாறியுள்ளது. இந்நிலையில் நடிகர் விஷால் இந்த பணத்தை என்ன செய்யலாம் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது:- 

சேகர் ரெட்டியிடம் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை மாற்றுத் திறனாளிகளுக்கு கழிப்பறை கட்டுவதற்கும், புற்று நோய் மற்றும் தொழுநோய் பாதிக்கப்பட்டவர்களுக்கும் செலவிடலாம் என்று விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.