Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தவறாகக் குறிப்பிடப்பட்ட ஆண்டு வருமானம்… சீமான் மீண்டும் வேட்புமனுத்தாக்கல்!

Updated: புதன், 17 மார்ச் 2021 (12:31 IST)
சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலில் சீமான் தனது ஆண்டு வருமானத்தை தவறாகக் குறிப்பிட்டதை அடுத்து மீண்டும் வேட்புமனுத்தாக்கல் செய்ய உள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் மார்ச் 12ஆம் தொடங்கிய நிலையில், முக்கிய கட்சிகள், கூட்டணிகளின் வேட்பாளர்கள் நேற்று தங்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். இந்நிலையில் சீமான் வேட்புமனுவில் தனது ஆண்டு வருமானம் 1000 ரூபாய் என்று குறிப்பிட்டு இருந்தார். இது சம்மந்தமாக வெளியான புகைப்படம் இணையத்தில் கேலிகளையும் மீம்ஸ்களையும் உருவாக்கியது.

இந்நிலையில் சீமானின் வருமானம் ஆண்டுக்கு 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் எனவும், ரூ.1,000 என்பது அவர் வருமான வரி கட்டிய தொகை என்பதும், எழுத்துப் பிழையாக தாக்கல் செய்யப்பட்டதால், அதை சரி செய்யும் விதமாக மீண்டும் சீமான் வேட்பு மனுவை தாக்கல் செய்வார் என அவர் கட்சியின் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 

எல்லாம் காட்டு

வீடியோ வேண்டாம்.. நிறுத்துங்க.. சென்னை நிகழ்ச்சியில் டென்ஷனான நிர்மலா சீதாராமன்..

இடைத்தேர்தலில் இடதுசாரி கட்சிகள் தனித்து போட்டியிடுவது வருத்தம் தான்: மாணிக்கம் தாகூர்..

ஏற்கனவே தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் நிறுவனங்களுடன் ஒப்பந்தமா? தவெக அரசுக்கு பாஜக கண்டனம்...

லண்டனில் தமிழர்களை சந்திக்கும் முதல்வர் விஜய்!.. சிறப்பு ஏற்பாடு..

தமிழ்நாட்டிற்கு மேலும் நற்செய்தி.. Uno Minda நிறுவனம் ரூ.510 கோடி முதலீடு செய்வதாக அறிவிப்பு..

அடுத்த கட்டுரையில்
Show comments