சீமானுக்கு ஓட்டு போடலைனா செத்து தான் போவீங்க..!
”எனக்கு வாக்களித்தால் வாழ்வீர்கள், இல்லையென்றால் சாகவேண்டியது தான்” என்று கூறியுள்ளார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்.
மதுரையில் நடைபெற்ற பிரபாகரனின் பிறந்தாள் நினைவேந்தல் பொதுக்கூட்டத்தில் ஆவேசமாக உரையாற்றினார் சீமான். அப்போது நாட்டை யார் முதலில் விற்பது என்பது தான் காங்கிரஸ், பாஜக, இடையேயான போட்டி என்று கூறினார்.
மேலும் ரஜினிகாந்தை தலைவர் என்றும் பிரபாகரனை பயங்கரவாதி என்றும் கூறும் நிலையில் தான் தமிழர்கள் உள்ளனர். ரஜினி அரசியலுக்கு வருவதற்காக I am waiting என கூறினார். மேலும் ”எனக்கு வாக்களித்தால் வாழ்வீர்கள், இல்லையென்றால் சாவீர்கள்” எனவும் ஆவேசமாக கூறினார்.
தனது அரசியல் மேடைகளில் பலமுறை தான் பிரபாகரனுடன் உணவு உண்டதாகவும், அவரிடம் போர் பயிற்சி பெற்றதாகவும் கூறிவருவது குறிப்பிடத்தக்கது.