1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 19 ஏப்ரல் 2023 (12:58 IST)

விஜய்தான் என்னை ஆதரிக்க வேண்டும்: நாம் தமிழர் கட்சியின் சீமான் பேட்டி..!

Seeman Vijay
நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் அவர்தான் என்னை ஆதரிக்க வேண்டும் என்றும் நான் அவரை ஆதரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
 
நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது உறுதி என்பது அவரது செயல்பாடுகளில் இருந்து தெரிய வருகிறது. குறிப்பாக அம்பேத்கர் மற்றும் தீரன் சின்னமலை ஆகியோர்களின் சிலைகளுக்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் மாலையிட்டு மரியாதை செய்தது அரசியலுக்கான ஆரம்பம் என்ற கருதப்படுகிறது.
 
இந்த நிலையில் விஜய் அரசியல் குறித்த கேள்விக்கு பதில் அளித்த நாம் தமிழர் கட்சியின் சீமான், ‘விஜய் அரசியலுக்கு வரட்டும் அவர் வருவது நல்லது தான். அவரது அரசியல் வருகையை வரவேற்கிறேன். ஆனால் அதே நேரத்தில் நான் அவரை ஆதரிக்க வேண்டிய அவசியம் இல்லை, அவர்தான் என்னை ஆதரிக்க வேண்டும், என்னுடன் அவர் சேர்ந்தால் எங்கள் இயக்கம் வலிமையாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran