1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 2 ஏப்ரல் 2024 (14:16 IST)

இரட்டை இலையில் நின்றவர்கள் குக்கரிலும் உதயசூரியனிலும் நிற்கிறார்கள்: தேனியில் சீமான் பிரச்சாரம்..!

seeman
ஒரு காலத்தில் ஒரே கட்சியில் இருந்த டிடிவி தினகரன் மற்றும் தங்க தமிழ்செல்வன் ஆகிய இருவரும் இரட்டை இலையில் போட்டியிட்டார்கள், ஆனால் தற்போது ஒருவர் குக்கர் சின்னத்திலும் இன்னொருவர் உதயசூரியன் சின்னத்திலும் போட்டியிடுகிறார்கள். இப்போது இந்த தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் நிற்பவர் நாளை எந்த கட்சி சின்னத்தில் போட்டியிடுவார் என தெரியாது என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று தேனியில் தேர்தல் பிரச்சாரம் செய்தபோது கூறியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் பேசியபோது இரட்டை இலையில் நின்றவர் குக்கரில் நிற்கிறார், இரட்டை இலைகள் நின்றவர் உதயசூரியனில் நிற்கிறார்,  இப்போது இரட்டை இலையில் இருப்பவர் அடுத்து எந்த கட்சிக்கு போவார் என தெரியாது, ஆனால் நாங்கள் எப்போதும் ஒரே கட்சியில் தான் இருப்போம் என்று சீமான் கூறினார்

இரட்டை இலை இரட்டை இலை என ஓட்டு போடுகிறீர்கள். எதுவும் செய்யாத அதிமுக என்ற கட்சி இருந்தால் என்ன, செத்தால் என்ன, சொல்லுங்கள் என்று கூறினார்

மேலும் நம்பிக்கையுடன் எங்களுக்கு வாக்களியுங்கள், உசிலம்பட்டியில் மகளிர் கலை கல்லூரி தொடங்கப்படும், மைக் சின்னத்தில் வாக்களியுங்கள், என் தாத்தா மூக்கையா தேவரை நாடாளுமன்றத்திற்கு அனுப்பியது போல், மருத்துவர் மதன் ஜெயபாலை நாடாளுமன்றத்தில் அனுப்புங்கள், நாங்கள் அரசியல் கட்சிகளுடன் கூட்டணி சேரவில்லை, மக்களை நம்பியே தனித்து போட்டு இருக்கிறோம்’ என்று சீமான் தெரிவித்தார்.


Edited by Siva