1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : சனி, 10 செப்டம்பர் 2022 (08:44 IST)

1000 ரூபாய்ல சிலிண்டர் கூட வாங்க முடியாது? ஸ்டாலினை வெளுத்த சீமான்!

எதற்கு 1000 வழங்கும் திட்டம்? ரூ .1000 கொடுப்பதற்கு பதிலாக கொடுக்கும் கல்வியை தரமாக கொடுங்கள் என சீமான் பேட்டி.


நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், முதல்வர் நிமிடத்திற்கு நிமிடம் பாடுபடுகிறேன் என கூறுகிறார். அது அவர் சொல்வது தான். முதல்வர் என்னவாக பாடுபடுகிறார் என்பதில் தான் உள்ளது. முதல்வர் பாடுபடுபவராக இருந்தால் அதனை எங்களை போன்ற பொதுவானவர்கள், மக்கள் சொல்ல வேண்டும்.

நம் முதல்வர் உழைக்கிறார், ஒய்வின்றி பாடுபடுகிறார் என மக்கள் சொல்ல வேண்டும். அவரே மேடைக்கு மேடை நான் உழைக்கிறேன் பாடுபடுகிறேன் என சொல்லக்கூடாது. நாம் சொல்ல வேண்டும். 80 % பிரச்சனைகளை, திட்டங்களை செய்ததாக முதல்வர் கூறுகிறார். பிறகு ஒரு கூட்டத்தில் 70 % பிரச்சனைகளை சரி செய்து விட்டோம் என சொல்லுகிறார். 8 பிரச்சனைகளையாவது தீர்த்தார்களா?

எதற்கு 1000 வழங்கும் திட்டம்? ரூ .1000 கொடுப்பதற்கு பதிலாக கொடுக்கும் கல்வியை தரமாக கொடுங்கள். எங்களுக்கு படிக்க காசு இல்லை, அப்பா அம்மா வறுமையில் உள்ளார்கள் என மாணவிகளை கையேந்த வைப்பது புதுமை அல்ல. 1000 ரூபாயை வைத்து ஒரு சிலிண்டர் வாங்க முடியுமா? இது ஆட்சி கிடையாது. திராவிட மாடல் என சொல்லிக்கொண்டு பல ஆயிரம் கோடியில் விளம்பரம் மட்டும் தான் நடக்கிறது.

இந்தியாவை 50 ஆண்டுகள் ஆட்சி செய்து மாற்றத்தை கொண்டு வராத ராகுல்காந்தி நடை பயணம் மேற்கொண்டு மாற்றம் கொண்டு வருவாரா? என்ன மாற்றம் வரப்போகிறது. காலையும், மாலையும் நடப்பதால் அவருக்கு வேண்டுமானால் மாற்றம் வரலாம். மோடியை எர்திக்க ஆள் வேண்டும் அதற்கு ராகுல் ஆள் இல்லை என தெரிவித்துள்ளார்.