1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 14 செப்டம்பர் 2023 (12:10 IST)

நாளையும் ஆஜராக முடியாது: போலீசாருக்கு தகவல் தெரிவித்த சீமான்..!

நடிகை விஜயலட்சுமியின் பாலியல் புகார் குறித்து விசாரணை செய்ய நாளை ஆஜராக வேண்டும் என்று சீமானுக்கு வளசரவாக்கம் போலீசார் சம்மன் அளித்த நிலையில் நாளையும் ஆஜராக முடியாது என சீமான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
சென்னை பாலவாக்கத்தில் உள்ள சீமானின் வீட்டிற்கு சென்று வளசரவாக்கம் போலீசார் சம்மன் அளித்தனர். நடிகை விஜயலட்சுமி புகார் விவகாரம் தொடர்பாக நாளை விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று அந்த சம்மனில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. 
 
ஆனால் சீமான் தரப்பினர் நாளை கலந்தாய்வு கூட்டம் இருப்பதால் ஆஜராக முடியாது என்றும் வேறு தேதியில் ஆஜர் ஆவதாக சீமான் தரப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
 
Edited by Mahendran