திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 30 ஆகஸ்ட் 2021 (16:45 IST)

பாஜகவின் ‘பி’ டீம் சீமான் என்பது உறுதியாகிவிட்டது: ஜோதிமணி எம்பி

பாஜகவின் ‘பி’ டீம் தான் சீமான் என்பது உறுதியாகிவிட்டது என காங்கிரஸ் எம்பி ஜோதிமணி தெரிவித்துள்ளார்
 
பாஜக பொதுச் செயலாளராக இருந்த கேடி ராகவன் சர்ச்சைக்குரிய வீடியோ வைரல் ஆனதை அடுத்து கேடி ராகவன் உள்பட பாஜகவினர் கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது. இது குறித்து காங்கிரஸ் எம்பி ஜோதிமணி போராட்டங்கள் செய்தார் என்றும் காவல் துறையில் புகார் அளித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இன்று காலை பேட்டியளித்த நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் ஒருவர் தனிப்பட்ட முறையில் நடந்த நிகழ்வுகளை படம் பிடித்து பொதுவெளியில் வெளியிடுவது குற்றம் என்றும் முதலில் வீடியோ வெளியிட்டவரை தான் கைது செய்ய வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார் 
 
சீமானின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இதுகுறித்து காங்கிரஸ் எம்பி ஜோதிமணி கூறுகையில் கே.டி.ராகவனுக்கு ஆதரவாக கருத்து கூறிய சீமான் பாஜகவின் ‘பி’ டீம் என்பது உறுதியாகி விட்டது என்றும் சீமானின் இந்த செயல் வெட்கக்கேடானது என்று தெரிவித்துள்ளார். ஆபாசமான அருவருக்கத்தக்க ஆபத்தான செயல்பாடுகளை ஆதரிக்கும் சீமான் போன்றவர்களிடம் பெண்களும் தமிழ் சமூகம் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்