வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 30 ஆகஸ்ட் 2021 (11:54 IST)

யாரும் செய்யாததையா அவர் செஞ்சிட்டார்?? – கே.டி.ராகவனுக்கு சீமான் ஆதரவு?

கே.டி.ராகவன் வீடியோ விவகாரம் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ளது வைரலாகியுள்ளது.

கடந்த சில நாட்கள் முன்னதாக பாஜக மாநில பொதுச்செயலாளர் கே.டி.ராகவன் ஆபாச வீடியோ கால் பேசியதை அதே கட்சியை சேர்ந்த மதன் ரவிச்சந்திரன் வெளியிட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கே.டி.ராகவன் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீங்கிய நிலையில், மதனும் கட்சியை விட்டு நீக்கப்பட்டார்.

இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ளது சீமான் “யாரும் செய்யாததையா அவர் செய்துவிட்டார்? அறைக்குள் நடந்த தனிப்பட்ட விஷயத்தை பதிவு செய்வது சமூக குற்றம். அதை வீடியோவாக எடுத்து வெளியிட்டவரை கைது செய்ய வேண்டும்” என கூறியுள்ளார்.