1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Updated : புதன், 29 மார்ச் 2017 (16:03 IST)

இப்படி ஒரு ஈனச் செயலை என் தம்பி செய்ய மாட்டான்: அந்த வீடியோ குறித்து சீமான் விளக்கம்

சமூக வலைதளத்தில் நாம் தமிழர் கட்சி ஆட்கள் செய்யும் லீலைகள் என வீடியோ ஒன்று வைரலாக பரவியது. அந்த வீடியோ குறித்து சீமான், இப்படி ஒரு ஈனச் செயலை எங்கள் தம்பி செய்ய மாட்டான் என விளக்கமளித்துள்ளார்.


 

 
சமூக வலைதளங்களில் அண்மையில் நாம் தமிழர் கட்சி ஆட்கள் செய்யும் லீலைகள் என வீடியோ ஒன்று வைரலாக பரவியது. இதுகுறித்து சீமான் விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:-
 
தேர்தல் நேரத்தில் இப்படியொரு தேவையில்லாத பொய்யான காட்சியை வெளியிட்டுள்ளனர். அதை வேண்டுமென்றே பரப்புகின்றனர். அதில் இருப்பது நாம் தமிழர் கட்சி ஆள் என எப்படி சொல்கிறார்கள்? இப்படி ஒரு ஈனச் செயலை செய்தவன் மறைவாக செய்திருப்பான். பிரபாகரன் படத்தின் முன் செய்திருக்க மாட்டான்.
 
அதை படம்பிடிக்க வேண்டுமென்ற பிரபாகரன் புகைப்படம் வைத்து இப்படி ஒரு காட்சியை வெளியிட்டுள்ளனர். நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவன் இப்படியொரு கேடுகெட்ட செயலைச் செய்ய மாட்டான். கழிவுகள் கொட்டப்படுவதைத் தடுக்க முடியாது. அதையும் எதிர்கொண்டுதான் கடந்து செல்ல வேண்டியுள்ளது, என்றார்.