விழுப்புரம் சம்பவம்: சீமான் கடும் கண்டனம்!
இரு குடும்பத்திற்கு இடையே ஏற்பட்ட முன்பகை காரணமாக விழுப்புரம் சிறுமி கொடூரமாக எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தமிழகத்தையே அதிர செய்தது.
இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே முருகன், கலியபெருமாள் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் ஸ்டாலின் இந்த சம்பவம் குறித்து பேசிய நிலையில் சீமான் தனது டிவிட்டர் பக்கத்தில் இது குறித்து பதிவிட்டுள்ளார்.
அதில், பெரியவர்களுக்குள் இருக்கும் குடும்பப்பகைக்குக் குழந்தையை எரித்துக் கொல்வதெல்லாம் ஏற்றுக்கொள்ளவே முடியாத கொடூரமான செயல். இதற்குக் காரணமானவர்களுக்கு எவ்வித பாகுபாடும் இன்றி விரைந்து தண்டனை வழங்கப்பட வேண்டும்.
மேலும், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் கடுமையான சட்டங்களால் மட்டுமே நிறுத்தப்படும் என்பதை உணர்ந்து அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என பதிவிட்டுள்ளார்.