1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 7 டிசம்பர் 2020 (12:45 IST)

எப்படி முடியும்? ரஜினிகாந்த் அரசியல் குறித்து சீமான் கேள்வி!

ரஜினிகாந்த் அரசியல் அறிமுகம் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி. 
 
ரஜினிகாந்த் சமீபத்தில் அரசியல் கட்சியில் தொடங்கி அரசியலில் ஈடுபடுவதை உறுதி செய்தார். டிசம்பர் 31ஆம் தேதி அரசியல் குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்றும் ஜனவரி மாதம் கட்சி ஆரம்பிப்பேன் என்றும் வரும் தேர்தலில் தனது கட்சி அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடும் என்றும் கூறினார்.  
 
மேலும் ரஜினி மக்கள் மன்றத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுனா மூர்த்தி அவர்களும் தலைமை ஆலோசகராக தமிழருவி மணியன் அவர்களையும் அவர் நியமனம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்நிலையில் இது குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், இத்தனை ஆண்டுகள்  ரசிகர் மன்றத்தை நிர்வகித்த நிர்வாகிகளில், செயல்பாட்டாளர்களில் ஒருவர் கூடவா உங்கள் கட்சியை ஒருங்கிணைத்து வழிநடத்த தகுதிபெறவில்லை? அவர்களில் ஏன் ஒருவரை கூட தேர்வு செய்யவில்லை? 
 
காங்கிரஸ், பாஜக கட்சிகளில் இருந்து விலகியவர்களை கட்சியில் சேர்த்துக்கோண்டு அவர்களை வைத்துக்கொண்டு நீங்கள் எப்படி மதச்சார்ப்பற்ற, சாதி மத உணர்வற்ற அரசியலை நடத்த முடியும்? என கேள்விகளை அடுக்கியுள்ளார்.