அண்ணாமலை ஒரு அரசியல் காமெடி: சீமான் கமெண்ட்!!
அரசியலில் ஏற்படும் நெருக்கடியான சூழலில் நமக்கு ஒரு நகைச்சுவை தேவைப்படும் என அண்ணாமலை குறித்து சீமான் கருத்து.
தமிழகத்தை சேர்ந்தவரான அண்ணாமலை ஐபிஎஸ் அதிகாரியாக கர்நாடகாவில் பணிபுரிந்து வந்த நிலையில் சமீபத்தில் தனது பணியை விடுத்து தற்சாற்பு விவசாயம் செய்ய தொடங்கினார். அவர் தற்போது பாஜகவில் இணைந்துள்ளார்.
இது குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் கேட்ட போது அவர், அரசர் பீர்பால், தெனாலி ராமனின் கதையை போலத்தான் அண்ணாமலையின் கதையும். அது ஒரு நகைச்சுவை. அரசியலில் ஏற்படும் நெருக்கடியான சூழலில் நமக்கு ஒரு நகைச்சுவை தேவைப்படும். அந்த நகைச்சுவையாகத்தான் நான் அண்ணாமலை பாஜகவில் சேர்ந்ததை பார்க்கிறேன் என தெரிவித்தார்.