1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 28 ஆகஸ்ட் 2020 (16:34 IST)

எங்க தலைமையில் தான் கூட்டணி; பாஜகவை ஓரம் கட்டும் அதிமுக!!

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் அமைச்சர் ஜெயகுமாரும் கூட்டணி குறித்து பேசியுள்ளனர். 
 
தமிழக பாஜக தலைவராக எல்.முருகன் பொறுப்பேற்றதை தொடர்ந்து பாஜகவில் உறுப்பினர்களை இணைக்கும் பணி வேகமெடுத்துள்ளது. அதோடு தேர்தலும் நெருங்கிவிட்டதால் கூட்டணி குறித்த சர்சைகளும் அவ்வப்போது வெளியாகிக்கொண்டிருக்க தான் செய்கிறது. 
 
சமீபத்தில், வரும் 2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில், தமிழகத்தில் பாஜகவின் உதவியின்றி எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது. அந்த அளவுக்கு பாஜக வலிமையாக உள்ளது என ஹெச். ராஜா தெரிவித்தார்.
 
இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் அமைச்சர் ஜெயகுமாரும் இது குறித்து பேசியுள்ளனர். முதல்வர் தெரிவித்ததாவது, தேர்தல் வரட்டும், கூட்டணியில் யார் என்பதே இன்னும் முடிவாகவில்லை என பதில் அளித்தார். 
 
அதேபோல அமைச்சர் ஜெயகுமார், தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக தலைமையில்தான் கூட்டணி அமையும். நாடாளுமன்ற தேர்தலில் எப்படி கூட்டணி அமைந்ததோ அதே போன்றுதான் அமையும். தேர்தல் வரும் போதுதான் எந்த கட்சிகள் எப்படி முடிவு செய்கிறார்கள் என்று தெரியும் என கூறினார்.