செவ்வாய், 6 ஜனவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Modified: சனி, 11 ஜூன் 2016 (15:32 IST)

தீனதயாளன் வீட்டில் அள்ள அள்ள அமிர்தம்

தீனதயாளன் வீட்டில் அள்ள அள்ள அமிர்தம்
தீனதயாளன் வீட்டில் தோண்ட தோண்ட புதையல்களாய் குடோனில் குவிந்து கிடக்கும் சாமி சிலைகள். மீண்டும் பலகோடி மதிப்புள்ள சாமி சிலைகள் மீட்கப்பட்டுள்ளது.



 
சென்னை ஆழ்வார்பேட்டையில் ஆந்திர தொழில் அதிபர் தீனதயாளன் வீட்டில் சிலை கடத்தல் பிரிவு காவல் துறையினரால் கடந்த வாரம் சோதனை மேற்கொள்ளப்பட்டது. சோதனையில் பலகோடி மதிப்புள்ள சாமி சிலைகள் கைப்பற்றப்பட்டது.
 
அதைத்தொடர்ந்து தீனதயாளன் காவல் துறையில் சரணடைந்தார். அவரிடம் விசாரணை நடத்திய போது சிலைகளை வெளிநாடுகளுக்கு கடத்தி விற்பனை செய்வதற்காக வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினர், தீனதயாளன் வீடு முழுவதும் நடத்திய சோதனையில் 43 உலோக சிலைகள் மற்றும் 124 சிலைகள் கைப்பற்றப்பட்டது.
 
இந்நிலையில் அவரது மற்றோரு வீட்டில் சோதனை நடத்திய போது மேலும் பல கோடி மதிப்புள்ள சாமி சிலைகள் கைப்பற்றப்பட்டது.
 
சோதனை முழுவதும் முடிவடைந்த பின்னர் எத்தனை சிலைகள் கைபற்றப்பட்டது என்ற கணக்கு தெரிவிக்கப்படும் என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.