1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : ஞாயிறு, 26 ஜூலை 2020 (11:10 IST)

தடுப்பூசி கண்டுபிடித்த பின்னரே பள்ளிகள் திறக்க வேண்டும்: பெற்றோர்கள் கோரிக்கை

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் நான்கு மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன என்பது தெரிந்ததே/ கொரோனா வைரஸ் பாதிப்பு எப்பொழுது குறைகிறதோ அப்போது தான் பள்ளிகள் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
இந்த நிலையில் சமீபத்தில் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் பெற்றோர்களிடம் கருத்து கணிப்பு ஒன்றை கேட்டது. அதன்படி ஆகஸ்ட் செப்டம்பர் அக்டோபர் இந்த மூன்று மாதங்களில் எப்போது பள்ளிகளை திறக்கலாம் என்று கருத்துக் கேட்டிருந்தது
 
இதற்கு பெரும்பாலான பெற்றோர்கள் தடுப்பூசி கண்டுபிடித்த பின்னரே பள்ளிகளை திறக்க வேண்டும் என்றும் படிப்பை விட மாணவர்களின் உடல் நலமே முக்கியம் என்றும் கூறியிருந்தனர். இதனை மனிதவளத்துறை அமைச்சகம் ஏற்றுக்கொண்டதாகவும் எனவே தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு நடைமுறைக்கு வந்த பின்னரே பள்ளிகளை திறக்க முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் இந்த கல்வி ஆண்டின் மிகவும் தாமதமாக தொடங்கலாம் என்று கருதப்படுகிறது