Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லீவ் விடாத பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை - மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

Updated: வெள்ளி, 5 அக்டோபர் 2018 (09:00 IST)
சென்னையில் உத்தரவை மீறி இன்று திறக்கப்படும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.
சென்னையின் பல பகுதிகளில் நேற்று இரவு முதல் தற்போது வரை நல்ல மழை பெய்து வருகிறது. விடிய விடிய பெய்து வரும் மழையால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. 
 
எனவே சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அளித்து  சென்னை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். 
 
ஆனால் ஆட்சியரின் உத்தரவையும் மீறி சென்னையில் சில பள்ளிகள் வழக்கம்போல் இயங்குவதாக புகார் கூறப்பட்டது. 
 
இதனையடுத்து இது குறித்து பேசிய ஆட்சியர் உத்தரவை மீறி இயங்கும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மழையில் பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு எதாவது ஆனால் பள்ளி நிர்வாகம் தான் பதில் கூற வேண்டும் என எச்சரித்துள்ளார்.

எல்லாம் காட்டு

யுடியூப்பில் சமையல் கற்று மாசம் ரூ.25 லட்சம் சம்பாதிக்கும் இளைஞர்!.. வீடியோ உள்ளே...

இல்லாத தொழிற்சாலையை மூட கோரிக்கை விடுத்தாரா எம்.எல்.ஏ.. அமைச்சர் கீர்த்தனா விளக்கம்...

100-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் போலி செயலிகள் மூலம் கட்டணம்.. அமலாக்கத்துறை கண்டுபிடிப்பு...

ஒரே டூவிலரில் சென்ற 4 மாணவிகள் பேருந்து மோதி பலி.. முதல்வர் விஜய் இரங்கல் மற்றும் நிதியுதவி...

கஜானா காலி!. விஜய்க்கு தூக்கம் வரல!.. தூய்மை பணியார்களிடம் பேசிய அமைச்சர்கள்!...

அடுத்த கட்டுரையில்
Show comments