புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 29 நவம்பர் 2017 (08:58 IST)

திருவாரூர் மாவட்டத்தில் இன்று பள்ளிகள் விடுமுறை!

சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் வடகிழக்கு பருவமழை கடந்த சில நாட்களாக கொட்டி தீர்ந்த நிலையில் தற்போது மழை ஓரளவுக்கு நின்றுள்ளது. ஆனால் தஞ்சை, திருவாரூர் பகுதிகளிலும், ஒருசில தென் மாவட்டங்களிலும் இன்னும் நல்ல மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் திருவாரூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்றிரவு முதல் நல்ல மழை பெய்து வருகிறது. இந்த மழை இன்று  காலையும் தொடர்வதால் திருவாரூர் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை என மாவட்ட ஆட்சியர்  நிர்மல்ராஜ் அறிவித்துள்ளார்.

மேலும் தஞ்சை பகுதியில் கனமழை : மழையை பெய்யும் அளவை பொறுத்து, பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க அந்தந்த தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அதிகாரம் அளித்து உத்தரவிட்டுள்ளார். எனவே தஞ்சை மாவட்டத்தில் உள்ளவர்கள் இன்று பள்ளி விடுமுறையா என்பதை அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்