1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 7 ஜூலை 2023 (07:29 IST)

கனமழை எதிரொலி.. எந்தெந்த பகுதிகளில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை..?

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது என்பதும் குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் மிக கன மழை பெய்து வருவதால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள நான்கு தாலுகாக்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் அம்ரித் உத்தரவு பிறப்பித்துள்ளார். 
தொடர் கன மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குந்தா, கூடலூர் மற்றும் பந்தளூர் ஆகிய நான்கு தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் அம்ரித் அறிவித்துள்ளார் 
 
நீலகிரி மாவட்டத்தில் உள்ள மற்ற பகுதிகளிலும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பகுதிகளிலும் பள்ளிகள் இன்று வழக்கம் போல் செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.3
 
Edited by Siva