புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 2 நவம்பர் 2020 (16:46 IST)

10 ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் இந்தி திணிப்பு இல்லை! பள்ளிக்கல்வித்துறை விளக்கம்!

10 ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் இந்தி மொழியை திணிப்பதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து அதற்கு பள்ளிக் கல்வித்துறை பதிலளித்துள்ளது.

கொரோனா காரணமாக இப்போது பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் 10ம் வகுப்பு பாட புத்தகத்தில் திறன் அறிவோம் என்ற குறுவினா ஒன்றில்  இந்தியை கற்க விரும்பும் காரணத்தை குறிப்பிடுக எனக் கேள்வி இடம்பெற்று இருப்பதாக சொல்லப்பட்டது. இதனால் மீண்டும் இந்தி திணிப்பு சர்ச்சை எழுந்தது. இதையடுத்து பள்ளிக்கல்வித் துறை அதற்கு விளக்கம் அளித்துள்ளது.

அதில் ’இடம்பெற்றுள்ள வினாவில் தமிழ் மற்றும் ஆங்கிலம் தவிர 3ஆவது மொழியாக கற்க விரும்பும் மொழி எது? அதற்கான காரணம் எழுது’ என்றுதான் கேட்கப்பட்டுள்ளதாக பதிலளித்துள்ளது. ஆனால் அதற்குக் கீழாகவே இந்தி மொழியைக் கற்க காரணம் என்று கேட்கப்பட்டு இருப்பது குறித்து எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.