Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிப்ரவரி 1ஆம் தேதிக்கு பின்னரும் பள்ளிகள், கல்லூரிகள் விடுமுறையா?

Written By siva
Updated: திங்கள், 24 ஜனவரி 2022 (07:00 IST)
தமிழகத்தில் தற்போது பள்ளி கல்லூரிகள் ஜனவரி 31ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கும் நிலையில் பிப்ரவரி 1 முதல் மேலும் 10 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப் பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
 
கொரோனா பாதிப்பு தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது என்பதும் நேற்று ஒரே நாளில் 30 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக ஜனவரி 31ஆம் தேதி வரை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப் பட்டிருக்கும் நிலையில்  பிப்ரவரி பத்தாம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க பள்ளி கல்வித்துறை திட்டமிட்டு உள்ளதாகவும் இதுகுறித்த அறிவிப்பை முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் விரைவில் அறிவிப்பார் என்றும் கூறப்படுகிறது
 
இருப்பினும் அனைத்து வகுப்புகளுக்கும் ஆன்லைன் வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும் என்றும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது
 
 
 

எல்லாம் காட்டு

லண்டனில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செய்த ஆதவ் அர்ஜூனா.. வைரல் புகைப்படம்...

2 தொகுதி இடைத்தேர்தல் கருத்துக்கணிப்பு என்ன சொல்லுது? ஒன்னு கன்ஃபர்ம்.. இன்னொன்னு ஊசலாடுது...

டிஆர்பி ராஜா பதவி பறிபோகிறதா? உதயநிதியின் அதிரடி நடவடிக்கை?

ராஜினாமா செய்தவர்கள் மீண்டும் இடைத்தேர்தலில் போட்டியிடுவதா? நீதிமன்றம் அதிருப்தி

இடைத்தேர்தலில் போட்டி இல்லை.. ஆனால் யாருக்கு ஆதரவு. டிவிஸ்ட் வைத்த அன்புமணி...

அடுத்த கட்டுரையில்
Show comments