வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வியாழன், 31 ஆகஸ்ட் 2023 (20:43 IST)

பேப்பர் பேனா பென்சில் வாங்குவதில் ஊழல் ... வாக்குவாதம் செய்த கவுன்சிலர்கள் சஸ்பெண்ட்

karur
கரூர் மாநகராட்சிக்கு பேப்பர், பேனா, பென்சில், நோட் வாங்க 50 லட்சம் ரூபாய் செலவு. அதிமுக கவுன்சிலர்கள் கேள்வி எழுப்பியதால் வாக்குவாதம். அதிமுக கவுன்சிலர்கள் இருவரை இரண்டு கூட்டத்திற்கு சஸ்பெண்ட் செய்து மேயர் உத்தரவிட்டார்.
 
கரூர் மாநகராட்சி மாமன்ற கூட்டம் இன்று மேயர் கவிதா கணேசன் தலைமையில்  நடைபெற்றது. இதில் அதிமுக கவுன்சிலர்கள் கடந்த முறை நடைபெற்ற கூட்டத்தில் பேப்பர், பென்சில், பேனா வாங்குவதற்காக 25 லட்சம் மதிப்பீடு தொகையாக இருந்த நிலையில், இன்று நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் அதே பேப்பர், பென்சில், பேனா வாங்குவதற்காக 25 லட்சம் என மொத்தம் 50 லட்சம் ரூபாய் முறை கேடு நடந்திருப்பதாக அதிமுக கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
 
இது குறித்து மாமன்ற கூட்டத்தின் அஜந்தா காப்பியை வைத்து  செய்தித்தாள்களுக்கு பேப்பர் பேனா பென்சில் வாங்குவதற்கு ஊழல் நடந்துள்ளதாக பேட்டியளித்தனர்.
 
இதனை காரணம் காட்டி அதிமுக கவுன்சிலர்கள் இருவர் சுரேஷ் மற்றும் ஆண்டாள் தினேஷ் இரண்டு கூட்டங்களுக்கு சஸ்பெண்ட் செய்து மாநகராட்சி மேயர் உத்திரவிட்டார். இதனை அடுத்து அதிமுக கவுன்சிலர்கள் கூட்டத்தை விட்டு வெளிநடப்பு செய்தனர்.