சவுக்கு சங்கர் மீண்டும் கைது.. முத்துராமலிங்க தேவர் குறித்த சர்ச்சை பேச்சு வழக்கு..!
பெண் காவல்துறை அதிகாரிகளை சர்ச்சைக்குரிய வகையில் பேசியது உள்பட சில வழக்குகளில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது பொன் முத்துராமலிங்கம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக மீண்டும் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுவரை சவுக்கு சங்கர் மீது 7க்கும் அதிகமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அதில் சில வழக்குகளில் அவருக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. இந்த நிலையில் மீதமுள்ள வழக்குகளிலும் ஜாமீன் கிடைத்தால் அவர் வெளியே வந்து விடுவார் என்று கூறப்பட்ட நிலையில் திடீரென கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பேட்டி அளித்தபோது, முத்துராமலிங்கத் தேவர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்கள் கூறியதாக அவர் மீது புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகாரின் அடிப்படையில் தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் அவரை கைது செய்ததற்கான ஆவணத்தை காட்டி நீதிமன்றத்தில் ஆஜர் செய்து பின்னர் அவரை மீண்டும் கோவை சிறையில் அடைத்தனர். இதனால் சவுக்கு சங்கருக்கு இன்னும் பிரச்சனை அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது.
Edited by Mahendran