செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 8 செப்டம்பர் 2023 (13:33 IST)

சாத்தான்குளம் தந்தை, மகன் கொல்லப்பட்ட வழக்கு: 5வது முறையாக ஜாமின் மனு தள்ளுபடி..!

சாத்தான்குளம் தந்தை, மகன் கொல்லப்பட்ட வழக்கில், கைதான முன்னாள் காவல் உதவி ஆய்வாளர் ரகு கணேஷின் ஜாமின் மனுவை 5வது முறையாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்தது
 
வழக்கு விசாரணை இறுதிகட்டத்தில் உள்ளது, இப்போது ஜாமின் வழங்கினால் பாதிப்பு ஏற்படும் என சிபிஐ தரப்பு வாதம் செய்ததால் அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டதாக தெரிகிறது.
 
மேலும் இவ்வழக்கில் கைதான காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பால கிருஷ்ணன், ரகு கணேஷ் மற்றும் காவலர்கள் என 9 பேர் கடந்த 3 ஆண்டுகளாக நீதிமன்றம் காவலில் சிறையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran