1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 21 ஆகஸ்ட் 2024 (17:02 IST)

2ஆம் கட்ட சுற்றுப்பயணமும் தோல்வி.. சசிகலாவுக்கு கிடைத்த ஒரே ஆறுதல் இதுதான்..!

சசிகலா தென்காசி மாவட்டத்தில் முதல் கட்ட சுற்றுப்பயணம் செய்த போது கூட்டமே இல்லை என்பதால் அந்த சுற்றுப்பயணம் தோல்வி அடைந்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது இரண்டாம் கட்ட சுற்றுப்பயணமும் தோல்வி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது .
 
திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளில் இரண்டாம் பட்ட சுற்றுப்பயணம் செய்து வரும் சசிகலாவின் சுற்றுப்பயணத்திற்கு எவ்வளவுதான் முன்னேற்பாடு செய்தாலும் கூட்டம் காட்ட முடியவில்லை என்பதால் சசிகலா சோர்ந்து போனதாக கூறப்படுகிறது.
 
ஆனால் அதே நேரத்தில் சமீபத்தில் சசிகலாவின் பிறந்தநாளின் போது அதிமுகவின் சில சீனியர் நிர்வாகிகள் அவருக்கு வாழ்த்து சொன்னது மட்டுமே ஒரே ஆறுதல் என்று தகவல் வெளியாகி உள்ளன.
 
குறிப்பாக டெல்டா பகுதியை சேர்ந்த இரண்டு மாஜி அமைச்சர்கள், வட மாவட்ட சீனியர் ஒருவர், கொங்கு பகுதியைச் சேர்ந்த ஒருவர் வாழ்த்து தெரிவித்ததாக கூறப்படுகிறது .ஆனால் அதே நேரத்தில் அவர்கள் வாழ்த்து தெரிவித்தது உளப்பூர்வமானதுதானா என்ற சந்தேகமும் சசிகலாவுக்கு இருப்பதாக கூறப்படுகிறது.
 
மொத்தத்தில் அதிமுகவை கைப்பற்றி விடலாம் என்பது சசிகலாவுக்கு கானல் நீராகவே போய்விடும் என்று கூறப்பட்டு வருகிறது.
 
Edited by Mahendran