திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: சனி, 31 டிசம்பர் 2016 (14:53 IST)

சசிகலாவின் காலில் விழுந்த ‘முதல்வர்’ பன்னீர்செல்வம்!

சசிகலாவின் காலில் விழுந்த ‘முதல்வர்’ பன்னீர்செல்வம்!

அதிமுக பொதுச்செயலாளராக வி.கே.சசிகலா இன்று ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார். பின்னர் கட்சியினரிடையே உரையாற்றினார் சசிகலா.


 
 
சசிகலாவின் முதல் உரை இதுதான். இதுவரை மறைமுகமாக அரசியலில் இருந்த சசிகலா தற்போது நேரடி அரசியலில் இறங்கியுள்ளார். ஜெயலலிதா வகித்து வந்த அதிகாரமிக்க கட்சி பதவியான பொதுச்செயலாளர் பதவியை அவரது மறைவிற்கு பின்னர் ஒரு வழியாக அடைந்துவிட்டார் சசிகலா.
 
இன்று பொதுச்செயலாளராக பதவியேற்ற பின்னர் கட்சி தொண்டர்களிடையே உரையாற்றி சசிகலா தன்னுடைய உரையை முடித்துவிட்டு திரும்பும் போது அவரது காலில் தமிழக முதல்வரும் அதிமுக பொருளாளருமான ஓ.பன்னீர்செல்வம் விழுந்தார்.
 
முதல்வர் பன்னீர்செல்வத்தை தொடர்ந்து மற்ற மூத்த தலைவர்களும் சசிகலாவின் காலில் விழு தயாராக இருந்தனர். ஆனால் சசிகலா பன்னீர்செல்வம் காலில் விழுந்ததும் இப்படி காலில் விழ வேண்டாம் என அதனை தடுத்துவிட்டு அங்கிருந்து கிளம்பினார்.