செவ்வாய், 25 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: வெள்ளி, 5 ஆகஸ்ட் 2016 (08:16 IST)

சசிகலா புஷ்பாவின் புதிய புகைப்படங்கள்: வாட்ஸ் ஆப்பில் வலம் வருகிறது!

சசிகலா புஷ்பா விவகாரம் நாளுக்கு நாள் சிக்கலாகி வருகிறது. புகார், குற்றச்சாட்டு, வழக்கு என சுமூகமாக சசிகலா புஷ்பா விவகாரம் சிக்கலாகி வருகிறது. இந்நிலையில் சசிகலா புஷ்பாவின் புதிய இரண்டு புகைப்படங்கள் சமூக வலைதளமான வாட்ஸ் ஆப்பில் வலம் வருகிறது.


 
 
சசிகலா புஷ்பா என்ற இந்த பெயர் தற்போது மிகவும் பிரபலமாகி விட்டது. வாலிபர் ஒருவருடன் சசிகலா புஷ்பா பேசிய சர்ச்சைக்குறிய தொலைப்பேசி உரையாடல் வெளியாகி முதன் முதலில் இவர் பெயர் பேசப்பட்டது.
 
இந்த விவகாரம் நடந்த பின்னர் திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா உடன் சசிகலா புஷ்பா மிகவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
 
இந்த புகைப்படங்கள் மார்ஃபிங்க் செய்யப்பட்டவை என கூறப்பட்டாலும், இதே போன்று சசிகலா புஷ்பா தனது கணவருடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியானாலும், எது உண்மையான புகைப்படம் என்ற சந்தேகம் இன்னமும் தீர்க்கப்படவில்லை.
 
இந்நிலையில் மீண்டும் சசிகலா புஷ்பாவின் இரண்டு புகைப்படங்கள் வாட்ஸ் ஆப்பில் உலா வருகிறது. இந்த புகைப்படங்கள் எப்படி வெளியாகிறது என்ற தகவல் தெரியவில்லை.