1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 1 செப்டம்பர் 2019 (20:03 IST)

விஜய்யும் இல்ல, சிம்புவும் இல்ல, இவர்தான் அடுத்த சூப்பர் ஸ்டார்: சசிகலா புஷ்பா

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று முன்தினம் பேட்டி அளித்த போது ரஜினியை அடுத்து விஜய்தான் சூப்பர் ஸ்டார் என்றும், திரையுலகில் ரஜினிக்கும் விஜய்க்கு மட்டுமே தற்போது போட்டி இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன் அவரே அடுத்த சூப்பர் ஸ்டார் சிம்புதான் என்றும் கூறியிருந்தார்.
 
 
அதேபோல் விஜய்யின் தாயார் எழுதிய கடிதம் ஒன்றில் எம்கே தியாகராஜ பாகவதர், எம்ஜிஆர், ரஜினியை அடுத்து விஜய்தான் சூப்பர் ஸ்டார் என்று கூறினார். இந்த நிலையில் அதிமுக எம்பி சசிகலா புஷ்பா ஊடகம் ஒன்றில் பேட்டியளித்த போது அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய்யும் இல்லை, சிம்புவும் இல்லை, சிவகார்த்திகேயன் தான் என்று கூறியுள்ளார்.
 
 
எந்தவித சினிமா பின்புலமும் இல்லாமல் சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்து சின்னத்திரையில் ஜொலித்து தற்போது வெள்ளித்திரையில் வெற்றி கொடி கட்டி பறந்து கொண்டிருக்கும் சிவகார்த்திகேயன் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்றும் விஜய்க்கும் தைரியம் இருந்தால் சிவகார்த்திகேயன் படம் ரிலீஸ் ஆகும் தினத்தில் தனது படத்தை ரிலீஸ் செய்ய சொல்லுங்கள் பார்ப்போம் என்று சவால் விட்டுள்ளார் சசிகலா புஷ்பா இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது