ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: வியாழன், 16 பிப்ரவரி 2017 (14:09 IST)

10 அடி அகலம்;12 அடி நீள அறை ; பக்கத்து அறையில் சயனைடு மல்லிகா - சசிகலா சிறை வாழ்க்கை

அதிமுக தற்காலிக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட சசிகலா தற்போது பெங்களூர் சிறையில் இருக்கிறார். 


 

 
சொத்துகுவிப்பு வழக்கில் குற்றவாளிகள் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததை அடுத்து, சசிகலா, அவரின் உறவினர்கள் சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோர் நேற்று பெங்களூர் பரப்பன அக்ராஹர நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். அதன்பின் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். கைதி எண்ணாக அவருக்கு 3295 கொடுக்கப்பட்டுள்ளது. 
 
முதல் வகுப்பு சிறை, சிறை உணவிற்கு பதிலாக வீட்டு உணவு மற்றும் தனி மருத்துவர் வசதி உள்ளிட்ட சில கோரிக்கைகளை சசிகலாவும், இளவரசியும் நீதிமன்றத்தில் முன் வைத்தனர். ஆனால், அதை நீதிபதி நிராகரித்துவிட்டார். 10 அடி அகலமும், 12 அடி நீளமும் உள்ள அறையில் அவர்கள் அடைக்கப்பட்டனர்.  சிறைக்கு சென்றது முதல்,  சசிகலா சோகமாகவே இருந்ததாக கூறப்படுகிறது. 


 

 
அவரின் பக்கத்து அறையில் ‘சயனைடு மல்லிகா’ என்ற கைதி அடைக்கப்பட்டுள்ளார். பல்வேறு கொலை வழக்குகளில் சிக்கி, நீண்ட வருடங்களாக அவர் அந்த சிறையில் இருக்கிறார். கடந்த முறை ஜெ.விம், சசிகலாவும் சிறைக்கு சென்ற போது கூட அவர் அங்குதான் இருந்தார். 


 

 
அப்போது, அவர் ஜெயலலிதாவை சந்திக்க மிகவும் ஆர்வமாக இருந்தார். அதற்காக சிறைத்துறை அதிகாரிகளிடம் அனுமதியும் கேட்டார். ஆனால் அவருக்கு அதிகாரிகள் அனுமதி வழங்கவில்லை..