வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By vinoth
Last Updated : ஞாயிறு, 25 பிப்ரவரி 2024 (09:30 IST)

2019 ஆண்டு தேர்தலை போல இம்முறை பாஜக வெல்லாது- காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் கருத்து!

வரும் ஏப்ரல் மாதத்தில் நாடாளுமன்றத்துக்கான தேர்தல் நடக்க உள்ளது. இந்தியா முழுவதும் எத்தனைக் கட்டமாக தேர்தல் நடக்க போகிறது என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை. இதையடுத்து பாஜக தலைமையில் ஒரு கூட்டணியும், காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியும் அமைந்துள்ளது.

முன்னணி ஊடகங்கள் நடத்தும் கருத்துக் கணிப்புகளில் இம்முறையும் பாஜக வே வெல்லும் என தகவல்கள் வருகின்றன. இதுபற்றி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சசிதரூர் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது “2019 ஆம் ஆண்டு வென்றது போல இம்முறை பாஜகவால் வெல்ல முடியாது. இந்த முறை அவர்கள் சரிவை சந்தித்திருப்பதை நாம் பார்க்க முடிகிறது.

அவர்கள் எவ்வளவு தூரம் சரிவை சந்திப்பார்கள் என்பது எதிர்க்கட்சிகளின் தீவிர பிரச்சாரத்தைப் பொறுத்தே அமையும். ” எனக் கூறியுள்ளார். ஆனால் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியில் இருக்கும் சில பிராந்தியக் கட்சிகள் இப்போது கூட்டணியில் இருந்து வெளியேறி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.