வார்னிங் கொடுத்தும் கேட்கல.. சரவணா ஸ்டோர் வணிக வளாகத்துக்கு சீல்!
தமிழக அரசின் உத்தரவை மீறி செயல்பட்டதால் சரவணா ஸ்டோர் வணிக வளாகத்துக்கு சீல்.
நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில், தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வணிக வளாகம், கேளிக்கை விடுதிகள், மால்கள், தியேட்டர்கள் ஆகியவற்றை வருகிற 31 ஆம் தேதி வரை மூடச் சொல்லி உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்நிலையில் அரசின் உத்தரவையும் மீறி காலையிலிருந்து புரசைவாக்கத்தில் உள்ள சரவணா ஸ்டோர் எப்போதும் போல செயல்பட்டு வந்தது. இதனையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் நேரடியாக வந்து கடையை மூடும்படி தெரிவித்துள்ளனர்.
மாநகராட்சி அதிகாரிகள் வந்த போது சரி சரியென சொல்லி விட்டு அவர்கள் சென்ற பிறகு விற்பனையை நடத்தி வந்துள்ளனர். இதனை அறிந்து மாநகராட்சி மண்டல அதிகாரி, காவலதுறையினருடன் சென்று புரசைவாக்கம் சரவணா ஸ்டோர் வணிக வளாகத்துக்கு 7 மணியளவில் சீல் வைத்தனர்.